'நேர்கொண்ட பார்வை' படத்தைத் தொடர்ந்து, 'தல' அஜித் மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிக்கும் படத்தில் நடித்துவருகிறார். 'வலிமை' என்று பெயர் வைக்கப்பட்ட இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து முடிந்தது. இந்நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பை ஸ்பெயினில் நடத்த படக்குழுவினர் முடிவு செய்தனர்.
அஜித்தின் 'வலிமை' படத்தில் இப்படி ஒரு சேஸிங்கா..! - லேட்டஸ்ட் அஜித் பட அப்டேட்
அஜித் நடிப்பில் உருவாகி வரும் 'வலிமை' படத்தில் அசாதாரணமான சண்டைக்காட்சி ஒன்றை எடுக்கப் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
![அஜித்தின் 'வலிமை' படத்தில் இப்படி ஒரு சேஸிங்கா..! அஜித்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-12:48-ajith-valimai-1-0906newsroom-1591687081-376.jpg)
இந்தநிலையில், கரோனா வைரஸ் பரவல் காரணமாக, படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. 'வலிமை' படத்தில் 'தல' அஜித்துடன், ஹூமா குரேஷி, யோகி பாபு, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா ஆகியோர் பிரதான கேரக்டர்களில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்துக்கு இசையினை யுவன் ஷங்கர் ராஜா அமைக்க, ஒளிப்பதிவினை நிரவ் ஷா கையாள பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் படத்தைப் பிரமாண்டமாகத் தயாரித்து வருகிறார்.
ஊரடங்கு சூழ்நிலை இயல்புக்குத் திரும்பிய பின், படப்பிடிப்பைத் தொடங்க இருக்கும் படக்குழுவினர், அசாதாரணமான, டிரெண்ட்செட்டிங் சேஸிங் காட்சிகளை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.