தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

வலிமை இரண்டாவது சிங்கிள்; அம்மா பாடல் வரிகள் வெளியீடு! - நடிகர் அஜித்தின் வலிமை பட பாடல் வெளியீடு

அஜித் குமார் நடிப்பில் வெளியாகவுள்ள வலிமை திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் (அம்மா பாடல்) வரிகள் இன்று மாலை இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் ஆதரவைப் பெற்றுள்ளன.

வலிமை இரண்டாவது சிங்கிள்; அம்மா பாடல் வரிகள் வெளியீடு!
வலிமை இரண்டாவது சிங்கிள்; அம்மா பாடல் வரிகள் வெளியீடு!

By

Published : Dec 5, 2021, 8:04 PM IST

ஹெச். வினோத் இயக்கத்தில், அஜித்குமார் நடித்துள்ள 'வலிமை' படத்தின் படப்பிடிப்புப் பணிகள் நிறைவுற்று பின்னணி பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திரைப்படமானது பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீஸ் செய்யப்படும் என படத்தயாரிப்பாளர் போனிகபூர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் 'நாங்க வேற மாறி' பாடல் ஏற்கெனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த பாடல் யூ-ட்யூப்பில் 35 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ரசிகர்கள் மத்தியில் பேராதரவைப் பெற்றுள்ளது.

பின்னர் வலிமையின் அடுத்த அப்டேட் குறித்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், டிசம்பர் 1ஆம் தேதி படத்தின் இரண்டாவது பாடல் ப்ரோமோ வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகியது.

இந்நிலையில் வலிமை திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் முழுப்பாடல் இன்று (டிச.5) மாலை 6.30 மணிக்கு வெளியாகியது. இந்தப் பாடலை விக்னேஷ் சிவன் எழுத, பாடகர் சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். பாடல் நடிகர் அஜித்குமார் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க:நடிகர் சத்யராஜின் சகோதரி கல்பனா காலமானார்

ABOUT THE AUTHOR

...view details