தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

வலிமை அப்டேட்: ரிலீஸுக்கு இரண்டு தேதிகள் ரிசர்வ் - அஜித்தின் வலிமை ரிலீஸ்

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்ட நிலையில், பிப்ரவரி 25 அல்லது மார்ச் 24 தேதிகளில் ஏதேனும் ஒரு நாளில் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வலிமை அப்டேட்
வலிமை அப்டேட்

By

Published : Jan 25, 2022, 1:04 PM IST

எச்.வினோத் இயக்கத்தில், அஜித் நடித்துள்ள படம் "வலிமை". போனி கபூர் தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் கரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளாக வெளியாகாமல், பொங்கலுக்கு வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது.

தற்போது ஒமைக்ரான் காரணமாக தமிழ்நாட்டில் மீண்டும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும், திரையரங்குகளில் 50 விழுக்காடு இருக்கைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதனால் தயாரிப்பாளர் போனி கபூர் வலிமை படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார். இந்நிலையில் வலிமை பிப்ரவரி 25 அல்லது மார்ச் 4 வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிப்ரவரி 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவில் தளர்வு அமல்படுத்தப்படும் என்றும் குறிப்பாக திரையரங்குகளில் 50 விழுக்காடு பார்வையாளர்கள் என்று தற்போது இருக்கும் நிலை மாறி 100 விழுக்காடு பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தமிழக அரசின் அறிவிப்பை பொறுத்து ‘வலிமை’ படத்தின் ரிலீஸ் தேதியும் உறுதி செய்யப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதையும் படிங்க:'படம் பிடிக்கவிட்டால் டிக்கெட் பணம் ரிட்டர்ன்' - புதுமுக நடிகர் அதிரடி!

ABOUT THE AUTHOR

...view details