'நேர்கொண்ட பார்வை' படத்தின் வெற்றியை தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வலிமை'. ஹூமா குரேஷி, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார்.
நீண்ட நாள்களாக இப்படத்தின் அப்டேட் கேட்ட ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாகப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ஒரு பாடல் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இத்திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுகுறித்து எந்தவொரு அப்டேட்டையும் வெளியிடாமல் படக்குழு மௌனம் காத்துவந்தது.