ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் 'வலிமை' படத்தில் நடித்து வருகிறார். நீண்ட நாள்களாக எடுக்கப்பட்டு வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. இதனையடுத்து படக்குழுவினர் இறுதிக்கட்ட பணிகளில் மும்முரமாக ஈடுபடவுள்ளனர்.
'வலிமை' படத்தின் போஸ்டர்கள், ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல்கள், படப்பிடிப்பு புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றன. இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரையரங்கில் வெளியாகும் எனப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அஜித் தனது பிஎம்டபிள்யூ பைக்கில் பயணம் மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் அஜித் தாஜ்மஹால் முன்பு எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலானது. அதைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் எல்லைப்பகுதியான வாகா எல்லையில், எல்லை பாதுகாப்பு படை வீரர்களுடன் அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வைரலாகின.
இப்போது 'வலிமை' படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அஜித் பயணித்த புதிய புகைப்படங்களை தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இதனுடன் போனி கபூர், " தனது கனவில் வாழ்வதிலிருந்தும் தனது ஒவ்வொரு கனவையும் நிறைவேற்றுவதிலிருந்தும் எதுவும் அவரைத் தடுக்க முடியாது. அஜித் உலகம் முழுவதும் விரும்பப்படுகிறார்" எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: உதயநிதி ஸ்டாலினை சந்தித்த போனிகபூர்!