சென்னை: ஃபர்ஸ்ட்லுக் வெளியிடப்படாமலேயே Book my show ஆப்பில் ஒரு மில்லியன் விருப்பத்தை பெற்ற முதல் தமிழ் திரைப்படம் என்ற சாதனையை வலிமை படம் பெற்றுள்ளது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படம் வலிமை. இதை போனி கபூர் தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது.
இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை காணத்தான் அஜித் ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு காத்துக்கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில், Book my show என்ற டிக்கெட் முன்பதிவு செய்யும் அப்ளிகேஷனில் வலிமை திரைப்படம் ஒரு மில்லியன் விருப்பத்தை பெற்றுள்ளது.
அதாவது படம் குறித்து ரசிகர்கள் தங்களது விருப்பத்தை இதில் பதிவு செய்வர். அதனடிப்படையில் வலிமை திரைப்படம் ஒரு மில்லியன் விருப்பத்தை பெற்றுள்ளது.
ஒரு படத்தின் ஃபர்ஸ்ட்லுக் கூட வெளியாகாமல் ஒரு மில்லியன் விருப்பத்தை பெற்ற முதல் தமிழ்படம் என்ற சாதனையையும் வலிமை படம் படைத்துள்ளது. இதனை ட்விட்டரில் அஜித் ரசிகர்கள் #VALIMAICreatesHistoryinBMS என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
சத்தமே இல்லாமல் சாதனை படைத்த வலிமை! - valimai update
ஒரு படத்தின் ஃபர்ஸ்ட்லுக் கூட வெளியாகாமல் ஒரு மில்லியன் விருப்பத்தை பெற்ற முதல் தமிழ்படம் என்ற சாதனையையும் வலிமை படம் படைத்துள்ளது.
வலிமை
இதையும் படிங்க:ஜான் விக் 4ஆம் பாகம் ஆரம்பம்!