தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

இணையத்தில் லீக்கான அஜித்தின் புதிய லுக்! - valimai new updates

சென்னை: அஜித் நடித்துவரும் புதிய படத்தின் புகைப்படம் ஒன்று இணையத்தில் லீக்காகி அவரது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

வலிமை
வலிமை

By

Published : Dec 31, 2020, 10:51 AM IST

நடிகர் அஜித் 'நேர்கொண்ட பார்வை' படத்தைத் தொடர்ந்து ஹெச். வினோத் இயக்கத்தில் 'வலிமை' படத்தில் நடித்துவருகிறார். போனிகபூர் இப்படத்தைத் தயாரித்துவருகிறார்.

வலிமை பட படப்பிடிப்பு தொடங்கி ஒருவருடம் ஆகும் நிலையில் இன்னும் படம் குறித்த எந்த அப்டேட்டையும் படக்குழு வெளியிடாமல் ரகசியம் காத்துவருகிறது. தொடர்ந்து அஜித் ரசிகர்கள் பலமுறை இப்படத்தின் அப்டேட் கேட்டும் படக்குழு இன்னும் ஒரு அப்டேட் கூட வெளியிடவில்லை. மேலும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்வரை ரசிகர்கள் பொறுமை காக்க வேண்டும் என்று படக்குழு சமீபத்தில் தெரிவித்தனர்.

லீக்கான வலிமை பட புகைப்படம்

இந்நிலையில் வலிமை படத்தில் இடம்பெற்றுள்ள அஜித்தின் குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் தற்போது லீக்காகியுள்ளது. இதையொட்டி அஜித் ரசிகர்கள், ‘VALIMAIதிருவிழா ஆரம்பம்’ என்ற ஹேஷ்டேக் உருவாக்கி ட்ரெண்ட் செய்து வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு அஜித் பைக் ஓட்டும் புகைப்படம் ஒன்று இணையத்தில் லீக்கானது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:எகிறிய வெளிநாட்டு உரிமை - வலிமை படத்தை கைப்பற்றிய யுனைடெட் இந்தியா

ABOUT THE AUTHOR

...view details