விஜய் நடித்துவரும் ‘பீஸ்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான போது, போனி கபூருக்கு பேனர் வைத்து ‘வலிமை’ அப்டேட் கேட்டார்கள் தல ரசிகர்கள். ஆனால், எந்த அப்டேட்டும் வரவில்லை.
கமல் நடிப்பில் உருவாகிவரும் ‘விக்ரம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது. போனி கபூரை சமூக வலைதளங்களில் பலரும் கலாய்க்க தொடங்கிவிட்டனர். வேண்டும், வேண்டும் வலிமை அப்டேட் வேண்டும் என போராட்டம் நடத்தாத குறையாக இருந்த அஜித் ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது.