ஹைதராபாத் : ரசிகர்களின் பேராதர்விற்கு இணங்க வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 11) மாலை 6 மணிக்கு வெளியானது. ஆரம்பமே அமர்களம் என்பது போல், முகத்தை ஹெல்மெட்டுக்குள் மறைத்தபடி அஜித் நிற்பார்.
அப்போது அவரின் ஹெல்மெட் கண்ணாடியில் பைக் ரேஸ் வீரர்கள் அவரை எதிர்த்து நிற்கின்றனர். இந்தக் காட்சியை அஜித் ஹெல்மெட் கண்ணாடி வாயிலாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் ஹெச். வினோத்.
ஆக, இது வெறித்தனமான சண்டைக் காட்சி போல் தெரிகிறது. ஏற்கனவே படத்தில் சண்டைக் காட்சிகள் அற்புதமாக வந்திருப்பதாக படக்குழு தெரிவித்திருந்தது.
அடுத்த பிரேமில் பலர் அந்தரத்தில் பறப்பது போல் உள்ளது. ஆக இதுவும் ஒரு வெறியேத்தும் ஒரு சண்டைக் காட்சியாகதான் இருக்க வேண்டும். இதற்கு பின்னணியில் யுவன் சங்கர் ராஜா, மெலடி கலந்த மிரட்டல் இசையுடன் பின்னியெடுக்கிறார்.
அடுத்து ஒரு கூட்டத்தையை தனி ஆளாய் எதிர்க்கிறார் அஜித். அவரின் கையில் சாக்கு மூட்டை ஒன்று வைத்துள்ளார். அதில் பாட்டில்கள் நிரப்பப்பட்டிருக்கலாம்.
சற்று நேரத்தில் மின்னல் போல் வருகிறது பவர் என்ற வாசகம். தொடர்ந்து அந்த வாசகம் இஸ் ஏ ஸ்டேட் மைண்ட் (Power is a state og Mind) என்று நீள்கிறது.