தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

VALIMAI UPDATE - பைக் வீலிங் செய்து அசத்திய அஜித் - பைக் வீலிங் செய்து அசத்திய அஜித்

'வலிமை' திரைப்படத்தின் மேக்கிங் காணொலி வெளியான நிலையில் நடிகர் அஜித் குமார் பைக் வீலிங் செய்யும் காட்சிகளை அவரது ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.

பைக் வீலிங் செய்து அசத்திய அஜித்
பைக் வீலிங் செய்து அசத்திய அஜித்

By

Published : Dec 14, 2021, 7:39 PM IST

போனி கபூர் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் ‘வலிமை’ திரைப்படத்தில் நடித்துவருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்புக் காட்சிகளின் காணொலியைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

வலிமை மேக்கிங் காணொலி

இந்தக் காணொலியில் சண்டைக் காட்சிகள், பைக் ஸ்டண்ட், வில்லன் கார்த்திகேயாவின் உடற்பயிற்சி உள்ளிட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

வில்லன் கார்த்திகேயா

மேலும், கரோனா ஊரடங்கு காரணமாக சென்னை மாநகரம் வெறிச்சோடி காணப்பட்ட காணொலியும், அதன் காரணமாகப் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டிருந்த நேரத்தில் 'வலிமை அப்டேட் கொடுங்கள்' என ரசிகர்கள் எழுப்பிய குரலும் பின்னணியில் இடம்பெற்றுள்ளன.

வலிமை மேக்கிங் காணொலி

இந்தக் காணொலியில் முக்கியமாக அஜித் பைக் வீலிங் செய்யும்போது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்துள்ளார். இதனைக் கண்டு அச்சமடைந்த படக்குழுவினர் விரைந்து அஜித்திடம் சென்றனர். ஆனால், அஜித் தன்னோட ஸ்டைலில் தனக்கு ஒன்றும் இல்லை எனத் தெரிவித்தார்.

வீலிங் செய்தபோது கீழே விழுந்த அஜித்

ரசிகர்களுக்காகத் தன்னோட வலியைத் தாங்கி வலிமை படத்தைச் செதுக்கி கொடுத்த அஜித்தை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடிவருகின்றனர். மேலும், இத்திரைப்படம் பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.

வீலிங் செய்யும் அஜித்

இதையும் படிங்க:பெங்களூரு விமான நிலைய சம்பவம்: விஜய்சேதுபதிக்கு அழைப்பாணை

ABOUT THE AUTHOR

...view details