தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

புக் மை ஷோவில் முதலிடம் பிடித்த ’வலிமை’! - வலிமை முதலிடம்

வெளிவரவிருக்கும் திரைப்படங்களைக் காண விரும்புபவர்களின் பட்டியலில் (புக் மை ஷோ), சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கையைப் பெற்று வலிமை திரைப்படம் முதலிடம் பிடித்துள்ளது.

’வலிமை’
’வலிமை’

By

Published : Oct 9, 2021, 5:34 PM IST

ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் 'வலிமை'. இப்படத்தில் ஹூமா குரேஷி, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், முதல் பாடல், கிளிம்ப்ஸ் (முதல் கண்ணோட்டம்) ஆகியவை வெளியாகி வரவேற்பைப் பெற்றன.

அதில் மாஸ் லுக்கில் காணப்பட்ட அஜித் பேசிய, ”கேம் ஆரம்பிச்சு ரொம்ப நேரம் ஆச்சு தம்பி” போன்ற வசனங்கள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்தன.

முதலிடம் பிடித்த வலிமை

வலிமை படம் அடுத்தாண்டு பொங்கல் வெளியீடாக திரைக்கு வரும் எனவும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்நிலையில் சினிமா டிக்கெட்களை பெற உதவும் பிரபல செயலியான ”புக் மை ஷோ”, வரவிருக்கும் திரைப்படங்களைக் காண ஆவலாக இருப்போரின் எண்ணிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில் அஜித் நடிப்பில் வெளியாகவுள்ள வலிமை திரைப்படம் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் எண்ணிக்கையைப் பெற்று முதலிடம் பிடித்துள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

புக் மை ஷோ பட்டியலின்படி திரைப்படங்களும், எண்ணிக்கையும் பின்வருமாறு:

வலிமை - 18 லட்சம்

கே.ஜி.எப் 2 - 3.56 லட்சம்

மரக்கார் - 1.12 லட்சம்

பிலால் - 1.11 லட்சம்

சூர்யவன்சி - 1.2 லட்சம்

ஆர்.ஆர்.ஆர் - 88 ஆயிரம்

இதையும் படிங்க:டாக்டர் படத்திற்கு வாழ்த்து தெரிவித்த பிரபலங்கள்

ABOUT THE AUTHOR

...view details