'நேர்கொண்ட பார்வை' படத்தையடுத்து அஜித்தை வைத்து, ஹெச். வினோத் 'வலிமை' படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் அப்டேட் நீண்ட நாள்களாக வராமல் இருந்த நிலையில், கடந்த மாதம் 11ஆம் தேதி இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர்கள் ஆகியவை வெளியாகி அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.
இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில் 'வலிமை' படத்தின் முதல் பாடலான, 'நாங்க வேற மாதிரி' என்ற குத்துப் பாடலின் லிரிக்கல் காணொலி இன்று (ஆக. 2) இரவு வெளியாகவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.