வலிமை ஃபர்ஸ்ட் லுக் தள்ளிப்போனது - சோகத்தில் ரசிகர்கள் - valimai first look
20:09 April 23
கரோனா பரவல் காரணமாக அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகாது என படக்குழு தெரிவித்துள்ளது.
போனி கபூர் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவான திரைப்படம் வலிமை. கரோனா தொற்று பரவல் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாள்களாய் நடைபெற்றது.
படம் தொடர்பான அப்டேட் எதுவும் இல்லாமல் பல காலமாய் வருத்தத்தில் இருந்த ரசிகர்கள் சர்ப்ரைஸ் அளிக்கும் வகையில் வரும் மே 1ஆம் தேதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் கரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் முன்பு அறிவிக்கப்பட்டபடி மே 1ஆம் தேதி வெளி வராது என படக்குழு அறிவித்துள்ளது.