போனி கபூர் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் 'வலிமை'.
பாலிவுட் நடிகை ஹீமா குரேஷி அஜித்திற்கு ஜோடியாக நடிக்க, இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசைகோர்ப்புப் பணிகளை செய்து வருகிறார்.
2019ஆம் ஆண்டு தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு கரோனா பரவல் மற்றும் ஊரடங்கு உள்ளிட்டப் பல்வேறு தடைகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படம் குறித்த எந்தவொரு அப்டேட்டும் ரசிகர்களுக்கு கிட்டாத நிலையில், இன்று (ஜூலை 11) மாலை 6 மணிக்கு சரியாக 'வலிமை’ படத்தின் மோஷன் போஸ்டரும் 4 ஃபர்ஸ்ட் லுக் புகைப்படங்களும் வெளியாகின.
இதை திரைப்படத்துறையினரும் அவரது ரசிகர்களும் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
இதுகுறித்து ட்வீட் செய்துள்ள நடிகர் ஹரிஷ் கல்யாண், இந்தப்பார்வை வலிமை மிக்கதாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ், 'வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஆச்சர்யப்படுத்துகிறது' என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இதுகுறித்து அஜித்தின் ரசிகர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'ரேஸ் கியருடன் இருசக்கர வாகனத்தில் அஜித்தைப் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி. அவர் இதை நேசிப்பார் என்று நம்புகிறேன்.
அவர் செய்வார் என்று எனக்குத் தெரியும். மேலும், அந்த கையுறை சமீபத்தில் இல்லாதவர்களுக்கு உதவுவதற்காக ஏலத்தில் வைக்கப்பட்டது' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: Valimai Update: மாஸாக வெளியான 'வலிமை' பட மோஷன் போஸ்டர்