தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 24, 2022, 7:25 AM IST

ETV Bharat / sitara

வந்தது வலிமை - திரையரங்குகளில் திருவிழா!

நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படம் இன்று(பிப்.24) வெளியாகியுள்ள நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளும் திருவிழாக் கோலம் பூண்டுள்ளன.

வெளியானது வலிமை - திரையரங்குகளில் திருவிழா!
வெளியானது வலிமை - திரையரங்குகளில் திருவிழா!

இயக்குநர் H.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் வலிமை. இத்திரைப்படத்தில், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா, ஹூமா குரேஷி உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார், போனி கபூர் இப்படத்தை தயாரித்துள்ளார். கரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக வெளியாகாமல் இருந்த இத்திரைப்படம் ஒருவழியாக இன்று(பிப்.24) உலகமெங்கும் வெளியாகியுள்ளது.


1,000 திரையரங்குகளில் வெளியீடு

தமிழ்நாட்டில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வலிமை திரைப்படம் வெளியாகியுள்ளது. டிக்கெட்கள் அனைத்துமே முன்பதிவு தொடங்கிய நாள் அன்றே விற்றுத்தீர்ந்துவிட்டன. திரைப்படம் வெளியாகியுள்ள திரையரங்குகள் அனைத்துமே விழாக் கோலமாக காட்சியளிக்கின்றன. அதிகாலை முதலே பல்வேறு ஊர்களில் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளதால் ரசிகர்கள் ஆராவாரத்துடன் கட்அவுட், பேனர்களுடன் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தனது ஆதர்ச நாயகனை திரையில் பார்த்த உற்சாகத்துடன் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ரசிகர்கள் மட்டுமல்லாது திரைப் பிரபலங்களும் முதல் நாள் முதல் காட்சியைப் பார்த்து கொண்டாடி வருகின்றனர்.

இதையும் படிங்க:வலிமைப் படம் ஓடும் தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீச்சு..!

ABOUT THE AUTHOR

...view details