தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

வலிமை பட இயக்குநருக்கும் யுவனுக்கும் இடையே விரிசல்? - மீண்டும் இணையும் வலிமை கூட்டணி

வலிமை பட இயக்குநர் எச்.வினோத்துக்கும் யுவனுக்கும் இடையே விரிசல் எனவும், அஜித்தை வைத்து எச்.வினோத் இயக்கும் அடுத்த படத்திற்கு ஜிப்ரான் இசை அமைக்க உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

By

Published : Jan 10, 2022, 1:20 PM IST

சென்னை:அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை படங்களை இயக்கியவர் எச்.வினோத். இந்த இரண்டு படங்களையும் போனி கபூர் தயாரித்துள்ளார்.

மீண்டும் இணையும் வலிமை கூட்டணி

வலிமை திரைப்படம் இந்த ஆண்டு பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாக இருந்தது. ஆனால் கரோனா ஊரடங்கு காரணமாக திடீரென தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் அஜித், எச்.வினோத் கூட்டணி மற்றொரு படத்தில் இணைகிறது. இப்படத்தையும் போனி கபூரே தயாரிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்க உள்ளது. இந்நிலையில் இப்படத்திற்கு ஜிப்ரான் இசை அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. எச்.வினோத் இயக்கிய தீரன் அதிகாரம் ஒன்று படத்திற்கு ஜிப்ரான்தான் இசை அமைத்திருந்தார். அதனால் இப்படத்திற்கு அவரையே வினோத் ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

யுவன் இசையில் திருப்தி இல்லை

மேலும் வலிமை படத்தின் பின்னணி இசையும் ஜிப்ரான்தான் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யுவன் சங்கர் ராஜாவின் இசையில் எச்.வினோத்திற்கு திருப்தி இல்லை என்றும் இதனால்தான் வலிமை படத்தின் பின்னணி இசையை ஜிப்ரான் மேற்கொண்டுள்ளதாக பேசப்படுகிறது.

இதுஒருபுறம் இருக்க எச். வினோத் மற்றும் அஜித் இணையும் அடுத்த படத்திற்கு அனிருத் இசை அமைக்க உள்ளதாகவும் ஒரு கருத்து உலாவுகிறது.

இதையும் படிங்க:நடிகை ஷோபனாவிற்கு ஒமைக்ரான் பாதிப்பு!

ABOUT THE AUTHOR

...view details