கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதனால் கரோனா முதல் அலையின்போது வெளியானபடியே இந்த ஆண்டும் திரைப்படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், தற்போது சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ’அண்ணாத்த’ திரைப்படம், எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியீட்டுக்குத் தயாராக உள்ள வலிமை திரைப்படம் ஆகியவற்றை தீபாவளிக்கு வெளியிடும் முயற்சிகள் நடைபெற்று வந்தன.
மேலும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம், அவரது மகன் துருவ் விக்ரம் இருவரும் இணைந்து நடித்து வரும் ’சியான் 60’ படத்தையும் தீபாவளிக்கு கொண்டு வர முயற்சிகள் நடைபெற்று வந்தன.