அஜித் நடிப்பில், ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தில் ஹியூமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டோ நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளன.
இத்திரைப்படம் பொங்கலுக்குத் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, கரோனா பரவலால் ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் சமீபத்தில் வருகின்ற பிப்ரவரி 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இப்படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் என நான்கு மொழிகளில் வெளியாகவுள்ளது. இத்திரைப்படம் சுமார் 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ளது.
இந்நிலையில் சாட்டிலைட் உரிமை, ஓடிடி உரிமை, டப்பிங் உரிமை, திரையரங்க உரிமை, வெளிநாட்டு உரிமை என ரிலீஸுக்கு முன்னரே 'வலிமை' திரைப்படமானது 300 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.
போனி கபூர் தயாரித்துள்ள இத்திரைப்படம் ரிலீஸுக்குப் பின்னர் மிகப் பெரிய வருவாயை ஈட்டும் எனவும் படக்குழுவினர் எதிர்பார்க்கின்றனர்.
இதையும் படிங்க:கடைசி விவசாயி பார்த்து கண்கலங்கிய மிஷ்கின்!