'நேர்கொண்ட பார்வை' படத்தை தொடர்ந்து அஜித் - ஹெச்.வினோத் கூட்டணி மீண்டும் 'வலிமை' படத்தில் இணைந்துள்ளது. இப்படத்தையும் போனி கபூர் தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
மீண்டும் இணையும் 'வலிமை' கூட்டணி! - வலிமை கூட்டணி
சென்னை: 'வலிமை' படத்தை தொடர்ந்து அஜித் - ஹெச்.வினோத் கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.
Valimai
இந்நிலையில் இந்த மூவர் கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜித்திற்கு ஒருவரின் பணி பிடித்துவிட்டால் தொடர்ந்து அவர்களுடனேயே படங்கள் நடிப்பார். 'சிறுத்தை' சிவா இதுபோல்தான் அஜித்துடன் தொடர்ந்து நான்கு படங்கள் செய்தார். அதேபோல் தற்போது ஹெச். வினோத்தின் நடவடிக்கைகள் பிடித்துள்ளதால் மீண்டும் அவருடன் அஜித் சேர்ந்து பயணிக்க முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.