தல அஜித் நடிப்பில், ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'வலிமை'. பொங்கல் விடுமுறைக்கு வெளியாகவுள்ள இப்படத்தில் வில்லனாக நடிகர் கார்த்திகேயா நடித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று (நவம்பர் 21) தனது நீண்ட நாள் தோழி லோகிதா ரெட்டி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் இருவரின் குடும்ப உறவினர்கள், நண்பர்கள் கலந்துகொண்டனர்.