தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'அவர்களை சொர்க்கத்தில் சேர்க்க வேண்டாம்; சொந்த ஊரில் சேருங்கள்' - கவிஞர் வைரமுத்து - வைரமுத்து ட்விட்டர்

மத்தியப் பிரதேசம், குணா மாவட்டத்தில் வியாழக்கிழமை (மே14) அதிகாலை நடந்த விபத்தில் எட்டு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்த துன்பியல் நிகழ்வு குறித்து கவிஞர் வைரமுத்து, தனது ட்விட்டர் பக்கத்தில் அவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

Vairmuthu
Vairmuthu

By

Published : May 14, 2020, 6:16 PM IST

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் உத்தரப் பிரதேசத்தில் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் கரோனா ஊரடங்கு காரணமாக, அவர்களின் வாழ்வு, வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள், சொந்த மாநிலம் திரும்ப முடிவெடுத்தனர்.

அதன்படி உத்தரப் பிரதேசத்தில் இருந்து வாகனத்தில் மகாராஷ்டிரா நோக்கி கிளம்பினர். அந்த வாகனம், மத்தியப் பிரதேச மாநிலம், குணா மாவட்டத்தின் கேன்ட் காவல் நிலைய எல்லைக்குட்பட்டப் பகுதியில் வியாழக்கிழமை (மே14) அதிகாலை 3 மணியளவில் வந்தது.

அப்போது எதிரே இருந்து வந்த பேருந்து, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பயணித்த வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் வாகனத்தில் பயணம் செய்த எட்டு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உயிர் இழந்தனர். 54 தொழிலாளர்கள் காயமுற்றனர். விபத்தில் காயமுற்ற தொழிலாளர்களுக்கு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனைத்தொடர்ந்து கவிஞர் வைரமுத்து இந்த விபத்து குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "மத்தியப் பிரதேசத்துச் சாலை விபத்தில் சொந்த ஊர் திரும்பிக்கொண்டிருந்த எட்டுத் தொழிலாளிகள் இறப்பு; நெஞ்செலும்பு நொறுங்குகிறது. மத்திய மாநில அரசுகளை மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்: புலம்பெயர் தொழிலாளர்களை சொர்க்கத்தில் சேர்க்க வேண்டாம்; சொந்த ஊரில் சேருங்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் வாசிங்க: 'தூணிலுமிருக்கும் துரும்பிலுமிருக்கும்' - கரோனா கவிதை வெளியிட்ட வைரமுத்து!

ABOUT THE AUTHOR

...view details