தேர்தல் பரப்புரைக்கு திருத்தணிக்கு சென்ற திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வேல் பரிசளிக்கப்பட்டது. இது தற்போது சமூகவலைதளத்தில் விவாத பொருளாக மாறியுள்ளது. பல்வேறு அரசியல் பிரமுகர்களும் இதுகுறித்து விமர்சித்திருந்தனர். பகுத்தறிவு பேசும் திமுக தற்போது தேர்தலுக்காக கடவுளை கையில் எடுத்துள்ளது என்றெல்லாம் கூறப்பட்டது.
தமிழர்களின் ஆதி ஆயுதம் வேல் - வைரமுத்து! - ஸ்டாலினுக்கு வேல் பரிசளிப்பு
சென்னை: தமிழர்களின் ஆதி ஆயுதம் வேல் என ஸ்டாலினுக்கு வேல் பரிசளித்தது குறித்து வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார்.

vairamuthu
தற்போது இது குறித்து கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், "வேல் என்பது கடவுளின் கைப்பொருள் மட்டுமல்ல. இரும்புக் காலத்தில் மனிதன் கண்டறிந்த வேட்டைக் கருவிகளுள் ஒன்று வேல். தமிழர்களின் ஆதி ஆயுதம் வேல். அது வேட்டைக்கும் உரியது, வழிபாட்டுக்கும் உரியது, போருக்கும் உரியது மற்றும் யாருக்கும் உரியது" என்று பதிவிட்டுள்ளார்.