ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற ஆப்பிரிக்க அமெரிக்கரின் கழுத்தில் அமெரிக்க காவலர் ஒருவர் கால்வைத்து அழுத்தியதை அடுத்து அவர் உயிர் இழந்தார். இதைத்தொடர்ந்து பெரும்பான்மையான நாடுகளில் நிறவெறிக்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.
இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாகவும் நிறவெறிக்கு எதிராகவும் கவிஞர் வைரமுத்து பாடல் ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார். ஜார்ஜ் ஃப்ளாய்டின் இறுதி வார்த்தைகளான என்னால் மூச்சுவிட முடியவில்லை என்பதை வைத்து இந்தப் பாடலை அவர் எழுதியுள்ளார். அந்த வரிகள் பின்வருமாறு:
'காற்றுக்கில்லை கறுப்பு வெள்ளை – என்னால்
மூச்சுவிட முடியவில்லை
என் காற்றின் கழுத்தில் - யார்
கால்வைத்து அழுத்துவது?
சுவாசக் குழாயில் – யார்
சுவர் ஒன்றை எழுப்பியது?
காற்றுக்கில்லை கறுப்பு வெள்ளை – என்னால்
மூச்சுவிட முடியவில்லை
எத்தனை காலம் விலங்குகள் இறுகும்?
எத்தனை காலம் நுரையீரல் நொறுங்கும்?