தமிழ்த்திரையுலகில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணிப் பாடலாசிரியராகத் திகழும் கவிஞர் வைரமுத்து, தனது 68ஆவது பிறந்த நாளை இன்று (ஜூலை 13) கொண்டாடுகிறார்.
இவருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலர் சமூக வலைதளத்தில் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், வைரமுத்து கலைஞர் நினைவிடத்திற்கு சென்று மலர்த் தூவியும், அதன் பின் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினார்.