நாட்டில் ஊரடங்கில் பெரும் பாதிப்பை விளிம்பு நிலை மக்கள் தினம் தினம் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகள் உற்பத்தி செய்த பொருள்களை விற்க முடியாமலும், விளைச்சல் ஆனப் பொருள்களை அறுவடை செய்ய முடியாமலும் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் அவர்களுக்கு வழங்கும் இலவச மின்சாரத்தை, அரசு தற்போது ரத்து செய்துள்ளது. இதற்குப் பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பலைகள் கிளம்பியுள்ளன.
பலரும் இந்தச் செயலுக்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில் கவிஞர் வைரமுத்துவும் தனது எதிர்ப்புக் குரலை ட்விட்டர் வாயிலாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
அதில், 'உரிமை மின்சாரத்தை நீக்கி, உழவர் குடிக்கு ஊறு செய்ய வேண்டாம். உழவர்களின் அடிமடியில் கை வைத்தால்... அரசு மின்மாற்றியில் கை வைத்ததாகிவிடும்' என வைரமுத்து பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க... 'அவர்களை சொர்க்கத்தில் சேர்க்க வேண்டாம்; சொந்த ஊரில் சேருங்கள்' - கவிஞர் வைரமுத்து