கவிஞரும் திரைப்பட பாடலாசிரியருமான வைரமுத்து புது பட்டாடை உடுத்தி தனது வழக்கமான தமிழ் நடையில் மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்,
அந்தப் பதிவில், "உயிர்த்தோற்றத்தின் மூலங்களான மண்ணுக்கும் விண்ணுக்கும் தமிழர்கள் நன்றி சொல்லும் தனிப்பெருநாள் தைத்திருநாள்.
தமிழர் திருநாளில் உலகத் தமிழர்கள் உலகை வாழ்த்துகிறார்கள். மண் வாழ்க, விண் வாழ்க, உயிர்கள் வாழ்க, உறவுகள் வாழ்க" என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பொங்கல் தினத்துக்கு வாழ்த்து தெரிவித்த வைரமுத்து இதையும் படிங்க... ’தீயினால் சுட்டப் புண்’- சிறுமிக்கு திருக்குறள் கற்றுக் கொடுத்த ஆர்எஸ்எஸ் தலைவர்