தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'பெண்மான்களைப் பேணுமளவுக்கு ஆண்மான்களை ஆதரிப்பதில்லை' - ரஹ்மானுக்கு ஆறுதல் கூறிய வைரமுத்து - Latest kollywood news

பாலிவுட்டில் தனக்கு எதிராக சதி நடக்கிறது என்று ஏ.ஆர். ரஹ்மான் கூறியதற்கு கவிஞர் வைரமுத்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.

வைரமுத்து - ரகுமான்
வைரமுத்து - ரகுமான்

By

Published : Jul 26, 2020, 12:51 PM IST

Updated : Jul 26, 2020, 5:42 PM IST

மறைந்த சுஷாந்த் சிங் கடைசியாக நடித்த 'தில் பேச்சரா' திரைப்படம் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியானது. இதில் இசையமைப்பாளராக பணியாற்றிய ஏ.ஆர். ரஹ்மான், சமீபத்தில் வானொலி நிகழ்ச்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, "பாலிவுட்டில் தான் வேலை செய்யக் கூடாது என்றும், தனக்கு எதிராக அவதூறு கருத்துக்களைப் பரப்பி வருகிறார்கள்" என்றும் குற்றஞ்சாட்டினார். இதைக் கண்டித்து ரஹ்மான் ரசிகர்கள் ட்விட்டரில் பாலிவுட்டில் நடைபெறும் அரசியலைச் சாடி வருகின்றனர்.

இந்நிலையில், இது குறித்து கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ரஹ்மானுக்கு ஆறுதல் கூறிய வைரமுத்து

அதில், "அன்பு ரஹ்மான்! அஞ்சற்க. வட இந்தியக் கலையுலகம் தமிழ்நாட்டுப் பெண்மான்களைப் பேணுமளவுக்கு ஆண்மான்களை ஆதரிப்பதில்லை. இரண்டுக்கும் உயிர்வாழும் எடுத்துக்காட்டுகள் உண்டு. ரஹ்மான்! நீங்கள் ஆண்மான்; அரிய வகை மான். உங்கள் எல்லை வடக்கு மட்டும் இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:'டேனி' பட அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் நடிகை வரலட்சுமி!

Last Updated : Jul 26, 2020, 5:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details