தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கட்டில் படத்தில் இணைந்த வைரமுத்து! - vairamuthu 40 years

கவிஞர் வைரமுத்து 'கட்டில்' படத்தில் பாரம்பரியத்தை போற்றும் வகையில் ஒரு பாடல் எழுதியுள்ளார்.

கட்டில் படத்தில் இணைந்த வைரமுத்து!
கட்டில் படத்தில் இணைந்த வைரமுத்து!

By

Published : Mar 10, 2020, 7:15 PM IST

இ.வி.கணேஷ்பாபு இயக்கி, கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் கட்டில். சிருஷ்டி டாங்கே கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தை மேப்பிள் லீஃப்ஸ் புரடொக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது.

இது குறித்து படக்குழுவினர் கூறுகையில், “நிழல்கள் படத்தில் இளையராஜாவின் இசையில் 'இது ஒரு பொன்மாலை பொழுது' பாடல் மூலம் திரைக்கு வந்த வைரமுத்து, சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதுகளை 7 முறை பெற்றார்.

கவிஞர் வைரமுத்து சினிமாத் துறைக்கு வந்து 40 ஆண்டுகளை நிறைவு செய்து 41ஆம் ஆண்டு தொடக்கமாக ’கட்டில்’ திரைப்படத்தில் பாடல் எழுதியுள்ளார். நமது பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும் உலக அரங்கிற்கு எடுத்துச்செல்லும் விதமாக இப்பாடல் எழுதப்பட்டுள்ளது. இப்பாடலை இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்” என்றனர்.

இதையும் படிங்க:ஆர்யா-சாயிஷா இணைக்கு 'டெடி' டீசரை பரிசளித்த படக்குழு!

ABOUT THE AUTHOR

...view details