கரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் உடல்நிலை பாதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து 14ஆம் தேதி அவரது உடல்நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
எஸ்.பி.பியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுவந்த நிலையில், நேற்று (செப்.24) முதல் அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. இந்தநிலையில் இன்று (செப்.25) மதியம் 1.04 மணிக்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று அறிவிக்கப்பட்டது. அவரது மறைவுக்கு திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் எஸ்பிபியின் மறைவு குறித்து கவிப்பேரரசு வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “ஆயிரம் காதல் கவிதைகள், பாடிய உனக்குக்