கே.வி. ஆனந்த் தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி பின் இயக்குநர் ஆனார். இவர் தமிழில்' காதல் தேசம்', 'முதல்வன்', 'சிவாஜி' உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். 'கனா கண்டேன்’ படத்தின் மூலம் இயக்குநராக அவதாரமெடுத்தவர், இதனையடுத்து ’அயன்’, ’கோ’, ’மாற்றான்’, ’அனேகன்’, ’கவண்’ ’காப்பான்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார்.
ஒளியாய் வாழ்வாய் இனி நீ: கே.வி. ஆனந்த் மறைவுக்கு வைரமுத்து இரங்கல்! - கே.வி. ஆனந்தின் படங்கள்
சென்னை: ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான கே.வி. ஆனந்த் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இன்று அதிகாலை (ஏப்ரல் 30) மாரடைப்பு காரணமாக கே.வி. ஆனந்த் உயிரிழந்தார். இவரின் மறைவுக்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், "வருந்துகிறேன் நண்பா! திரையில் ஒளிகொண்டு சிலை செதுக்கினாய்! வாஜி வாஜி பாடலை ராஜ கவிதையாய் வடித்தெடுத்தாய்! என் எத்தனையோ பாடல்களை ரத்தினமாய் மாற்றினாய்! இதோ உனக்கான இரங்கல்பாட்டை எங்ஙனம் படம் செய்வாய்? விதவையான கேமரா கேவிக்கேவி அழுகிறது கே.வி.ஆனந்த்! ஒளியாய் வாழ்வாய் இனி நீ." என பதிவிட்டுள்ளார்.