தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கள்ளிக்காட்டு நாயகனுக்கு 68ஆவது அகவை தினம் - பிறந்தநாள்

கவிஞர் வைரமுத்து இன்று (ஜூலை 13) தனது 68ஆவது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார்.

கவிஞர் வைரமுத்து பிறந்தநாள்
கவிஞர் வைரமுத்து பிறந்தநாள்

By

Published : Jul 13, 2021, 6:52 AM IST

தமிழ்த்திரையுலகில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணிப் பாடலாசிரியராகத் திகழும் கவிஞர் வைரமுத்து, தனது 68ஆவது பிறந்தநாளை இன்று (ஜூலை 13) கொண்டாடுகிறார்.

வைரமுத்து இதுவரை ஏழு தேசிய விருதுகள் பெற்று சாதனைப் படைத்துள்ளார். 40-க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தனது பாடல் வரிகளால் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்.

பாடல், எழுத்து இரண்டிலும் முத்திரை

மேலும், இவரது கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி காவியம், தண்ணீர் தேசம் போன்ற நாவல்களையும் மற்றும் திருத்தி எழுதிய தீர்ப்புகள், வைகறை மேகங்கள், தமிழுக்கு நிறம் உண்டு, சிகரங்களை நோக்கி போன்ற கவிதைத் தொகுப்புகளையும் எழுதி பல வாசகர்களை உருவாக்கியுள்ளார்.

40 ஆண்டுகளில் சுமார் 7ஆயிரத்து 500-க்கும் அதிகமான பாடல்களை தந்த வைரமுத்துவின் பிறந்தநாளுக்கு சினிமா பிரபலங்கள், நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:ரஜினிக்கு பக்காவான கதை ரெடி பண்ணும் ரஜினி ரசிகர்!

ABOUT THE AUTHOR

...view details