பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமியின் குரல் தமிழில் இறுதியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த 'கனா' திரைப்படத்தில் ஒலித்தது. 'லம்போதரா' என்ற கன்னடப் படத்திலும் 'கேடி' என்ற பாடலை அவர் பாடியிருந்தார்.
இந்த நிலையில், நடிகரும், இசையமைப்பாளருமான பிரேம்ஜி இசையமைக்கும் புதிய படத்தில் பாடகி வைக்கம் விஜயலட்சுமி பாடல் ஒன்றைப் பாடியுள்ளார்.
பிரேம்ஜி தற்போது வெங்கட் பிரபுவின் 'பார்ட்டி' திரைப்படத்திலும், சிம்பு தேவனின் 'கசட தபற' படத்திலும் இசையமைத்து வருகிறார்.
'பார்ட்டி' படத்தின் பாடல்கள் அனைத்தும் இசையமைக்கப்பட்டுள்ள நிலையில், சிம்பு தேவனின் 'கசட தபற' படத்தில் வைக்கம் விஜயலட்சுமி பாடியிருக்கலாம் எனத் தெரிகிறது.