தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

காதலிக்கு துணையாக அம்மாவை அனுப்ப தயாரான வைபவ் - சிக்ஸர் டிரெய்லர் - சிக்ஸர் டிரெய்லர்

காமெடி கலந்த ரெமாண்டிக் ஜானரில் உருவாகியிருக்கும் 'சிக்ஸர்' படத்தில் ரஜினி, கமல், அஜித் என ரெபரன்ஸ் செய்துள்ளார் நடிகர் வைபவ்.

சிக்ஸர் படத்தில் வைபவ்

By

Published : Aug 24, 2019, 8:13 PM IST

சென்னை: மேயாத மான் படத்துக்குப் பிறகு வைபவ் நடிப்பில் உருவாகியிருக்கும் 'சிக்ஸர்' படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு வெளியான மேயாத மான் நடிகர் வைபவுக்கு நல்ல பிரேக்கிங்காக அமைந்திருந்தது. படத்தில் அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இதையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் கேமியோ ரோலில் வந்து கலக்கினார்.

இதனைத்தொடர்ந்து, புதுமுக இயக்குநர் சாச்சி இயக்கத்தில் உருவாகியிருக்கும் சிக்ஸர் என்ற படத்தில் நடித்துள்ளார் வைபவ். படத்தில் அவருக்கு ஜோடியாக பாலக் லால்வானி என்பவர் நடித்துள்ளார். நடிகர்கள் சதீஷ், ராதாரவி, இளவரசு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்துக்கு இசை - ஜிப்ரான். ஒளிப்பதிவு - பி.ஜி. முத்தையா.

இந்த நிலையில், சிக்ஸர் படத்தின் ட்ரெய்லரை இயக்குநர் முருகதாஸ் வெளியிட்டுள்ளார். அதில், மாலைக்கண் நோயால் பதிக்கப்பட்டவராக வரும் வைபவ் செய்யும் கலாட்டாக்கள், காமெடிகள் என காட்சிகள் கலகலபாக இருக்கும் நிலையில், ரஜினி, கமல், அஜித், கவுண்டமணி என ரெபரன்ஸ் தந்துள்ளார்.

இந்தப் படம் ஆகஸ்ட் 30ஆம் தேதி திரைக்கு வருகிறது. தற்போது படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details