தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'கரோனா மாதிரி திடீர், திடீர்னு கிளப்புறாங்க'- போலி கணக்கு குறித்து வடிவேலு! - வடிவேலு

நடிகர் வடிவேலு ட்விட்டரில் தான் புதிதாக கணக்கு தொடங்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

'கரோனா மாதிரி திடீர், திடீர்னு கெளம்புறாங்க'- போலி கணக்கு குறித்து வடிவேலு!
'கரோனா மாதிரி திடீர், திடீர்னு கெளம்புறாங்க'- போலி கணக்கு குறித்து வடிவேலு!

By

Published : Mar 21, 2020, 6:23 PM IST

பெரும்பாலான நடிகர், நடிகைகள் ட்விட்டரில் கணக்கு தொடங்கி தங்களின் ரசிகர்களுடன் உரையாடி வருகின்றனர். மேலும் அதில் தங்களது படம் குறித்த அப்டேட்களை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று வடிவேலு @vadiveluoff என்ற பெயரில் ட்விட்டரில் புதிதாக ஒரு கணக்கு தொடங்கப்பட்டது. மேலும் அதில், ''பல ஆண்டுகள் கடந்தாலும் என்னை மறக்காமல் இருக்கம் தமிழ் மக்களுக்கு வணக்கம். என்னுடைய பழைய ட்விட்டர் தொலைந்து போய் விட்டது.

அதனால் ரஜினி ஐ போல் திரும்பி வந்துட்டேனு சொல்லு. கரோனா #PrayForNesamani ஆ அட பாவீங்களா!! சரி நன்றி ப்ரென்ட்ஸ் #விஜய் #சூர்யா என்றும் அஜித் ஐ மறக்க மாட்டேன்" என்று பதிவிட்டு இருந்தது. இதைக் கண்ட ரசிகர்கள் உண்மையில் இது வடிவேலுவின் புதிய ட்விட்டர் கணக்கு என்று எண்ணி பின்தொடர ஆரம்பித்தனர்.

இந்நிலையில், அந்த ட்விட்டர் கணக்கு தன்னுடையது இல்லை என்று வடிவேலு பிரபல ஊடகத்திற்குப் பேட்டியளித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது, ''எனக்கு ட்விட்டர் என்றாலே என்ன என்று தெரியாது. அந்த வீடியோ நான் தெனாலிராமன் படத்தில் நடிக்கும்போது எடுக்கப்பட்டது.

இயக்குனர் யுவராஜ் என் பெயரில் புதிதாக அப்போது ட்விட்டர் கணக்கு துவங்கினர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தான் அது. அதை யாரோ தேடியெடுத்து இப்படி தவறாக பயன்படுத்தியுள்ளார்கள். கரோனா மாதிரி திடீர், திடீர்னு கிளப்புறாங்க '' என்று கூறியுள்ளார். இதன்முலம் வடிவேலு ட்விட்டரில் கணக்கு தொடங்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

இதையும் படிங்க:ரசிகர்களிடம் அன்பைப் பரிமாற வந்துட்டேனே! - ட்விட்டரில் கடையைத் திறந்த வைகைப்புயல்

ABOUT THE AUTHOR

...view details