தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கலைத்தாயின் மீது சத்தியம் - சபதம் எடுத்த வடிவேலு! - சுராஜ்

இனிமேல் வரலாற்றுப் படங்களில் நடிக்கும் எண்ணம் எனக்கு இல்லை, இது கலைத்தாயின் மீது சத்தியம் என நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.

வடிவேலு, vadivelu birthday, வடிவேலு சுராஜ், வடிவேலு பிறந்தநாள்
வடிவேலு

By

Published : Sep 13, 2021, 8:08 AM IST

சென்னை: வடிவேலு தன்னுடைய பிறந்த நாளை 'நாய் சேகர்' படக்குழுவினருடன் நேற்று (செப். 12) கொண்டாடினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'இந்த பிறந்த நாளன்று, நான் புதிதாக பிறந்தது போல் உள்ளது. அதேபோல் பிரச்சினைகள் அனைத்தையும் கடந்து, தற்போது 'நாய் சேகர்' திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

திரையுலகில் நான் இன்னும் சாதிக்க வேண்டியது நிறைய உள்ளது. சாதித்து விட்டதாக நான் நினைக்கவில்லை. இன்னும் பல வித்தியாசமான வேடங்களில் நடிக்க வேண்டியுள்ளது. காட்டாற்று வெள்ளத்தில் போய்க்கொண்டிருந்த என்னை கலைத்தாய் அள்ளி எடுத்துக் கொண்டாள்.

கடவுள் கொடுத்த வரம்

மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதே எனது ஆசை. மற்றவர்களை சிரிக்க வைக்கும் இந்த வேலை எனக்கு பிடித்திருக்கிறது. குழந்தைகள் வரை என்னை தெரிந்துவைத்து, என்னை போன்றே பாவனைகள் செய்வது கடவுள் கொடுத்த வரம்.

திரைத்துறையில் எனக்கு போட்டி நான் தான். ஒவ்வொரு படம் நடிக்கும்போது முந்தைய கதாபாத்திரத்தை விட சிறப்பாக நடிக்க வேண்டும் என நினைப்பேன். நான் எந்த சமூக வலைதளத்திலும் இல்லை. என் பெயரில் வெளியாகும் அனைத்து சமூக வலைதளப் பதிவுகளும் போலியானவை.

காமெடியனாக மட்டுமே நடிப்பேன்

அதேபோல், சுராஜ் இயக்கத்தில் நான் நடிக்கும் புதிய படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். அவரிடம் முதன் முதலில் பேசியபோது என்னுடைய தீவிர ரசிகர் என உற்சாகத்துடன் பேசினார். அவருடன் வேலை செய்வது எனக்கு மகிழ்ச்சியாகவுள்ளது.

இரண்டு படங்களில் மட்டும் கதையின் நாயகனாக நடிப்பேன். மற்ற படங்களில் காமெடியனாக மட்டுமே நடிக்க இருக்கிறேன். வரலாற்றுப் படங்களில் இனி நடிக்கவே மாட்டேன். இது கலைத்தாயின் மீது சத்தியம். இதுவே எனது பிறந்த நாள் உறுதிமொழி" என்றார்.

இதையும் படிங்க: வைரலாகும் வடிவேலுவின் பிறந்தநாள் புகைப்படம்!

ABOUT THE AUTHOR

...view details