தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

உதயநிதியுடன் கூட்டணி சேர்வது யார்? - சினிமா அண்மைச் செய்திகள்

உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிக்கும் புதிய படத்தில், நடிகர் வடிவேலு இணையவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

உதயநிதியுடன் கூட்டணி சேருவது யார்?
உதயநிதியுடன் கூட்டணி சேருவது யார்?

By

Published : Dec 1, 2021, 7:19 PM IST

இயக்குநர் மாரி செல்வராஜ் 'கர்ணன்' திரைப்படத்திற்குப் பிறகு, துருவ் விக்ரம் மற்றும் தனுஷ் ஆகியோர் நாயகர்களாக நடிக்கும் இரண்டு படங்களை இயக்குகிறார்.

இத்திரைப்படங்களை இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிக்கிறார். முதல்கட்டமாக இயக்குநர் மாரி செல்வராஜ் இந்தப் படங்களைத்தான் இயக்கவிருந்தார்.

யார் அது?

இந்நிலையிலேயே உதயநிதி ஸ்டாலின் முழுநேர அரசியல்வாதியாய் மாற விரும்புவதால், கடைசியாக மாரி செல்வராஜ் படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இதன் காரணமாக உதயநிதி படத்தை முதலில் தொடங்க, அவர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கெனவே இத்திரைப்படத்தில் மலையாள நடிகர் பகத் ஃபாசில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்த நிலையில், தற்போது நடிகர் வடிவேலுவும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் வடிவேலு தற்போது 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:வெறித்தனம், வெறித்தனம்... அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்

ABOUT THE AUTHOR

...view details