தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

எனக்கு எண்டே கிடையாது - 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' மிரட்டல் லுக் வெளியீடு - நாய் சேகர் ரிட்டன்ஸ்

நகைச்சுவை நடிகர் வடிவேலு நீண்ட இடைவெளிக்குப் பின்பு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்னும் படத்தின் மூலம் திரைத் துறையில் மீண்டும் கால்பதிக்கவுள்ளார்.

v
v

By

Published : Oct 9, 2021, 6:53 AM IST

'இம்சை அரசன் 24ம் புலிகேசி' படப் பிரச்சினையால் சினிமாவில் சில ஆண்டுகளாக நடிக்காமல் இருந்தார் வைகைப்புயல் வடிவேலு. இந்தப் பிரச்சினை சமீபத்தில் பேசித் தீர்க்கப்பட்டது. இதனையடுத்து வடிவேலு அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுவருகிறார்.

தற்போது வடிவேலு இயக்குநர் சுராஜ் இயக்கும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்னும் படத்தில் நடிகராக மீண்டும் களம் இறங்குகிறார். இப்படத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன் தயாரிக்கிறது.

வடிவேலு நடிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாரயணன் இசையமைக்கிறார். தற்போது இப்படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன. இது முடிந்த பின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

முதலில் இப்படத்திற்குப் படக்குழுவினர் 'நாய் சேகர்' எனத் தலைப்பிட முடிவுசெய்திருந்தனர். ஆனால் அதே பெயரில் நகைச்சுவை நடிகர் சதீஷ் நாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு 'நாய் சேகர்' எனப் பெயர் வைக்கப்பட்டு ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியானதால், சுராஜின் படத்திற்கு 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' எனப் பெயர் மாற்றப்பட்டது.

'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தில் வடிவேலுவுடன் நடிக்க இருக்கும் நாயகி, துணை கதாபாத்திரங்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்தான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் வடிவேலு நாய்களுடன் மாஸாக அமர்ந்திருக்கும் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: கலைத்தாயின் மீது சத்தியம் - சபதம் எடுத்த வடிவேலு!

ABOUT THE AUTHOR

...view details