தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

வைகைப்புயலிடம் வம்பு வச்ச ரெடின் - சூட்டிங்கை கேன்சல் செய்த வடிவேலு - வைகை புயலிடம் வம்பு வச்ச ரெடின்

நடிகர் ரெடின் கிங்ஸ்லி படப்பிடிப்புக்குத் தாமதமாக வந்ததால் கடுப்பான வடிவேலு படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு சென்றுவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வைகை புயலிடம் வம்பு வச்ச ரெடின் - சூட்டிங்கை கேன்சல் செய்த வடிவேலு
வைகை புயலிடம் வம்பு வச்ச ரெடின் - சூட்டிங்கை கேன்சல் செய்த வடிவேலு

By

Published : Feb 3, 2022, 12:18 PM IST

சுராஜ் இயக்கத்தில் வடிவேலு 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' என்ற படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கின்றது. வடிவேலு பல ஆண்டுகளுக்குப் பிறகு திரையில் முன்னணிக் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதால் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.

நடிகர் ரெடின் கிங்ஸ்லி இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் படப்பிடிப்பில் வடிவேலு, ரெடின் கிங்ஸ்லீ இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

படப்பிடிப்பில் கிங்ஸ்லீ இரண்டு மணி நேரம் தாமதமாக வந்து கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அவருக்காக வடிவேலு இரண்டு மணி நேரம் காத்திருந்தார். ஒரு கட்டத்தில் கடுப்பான வடிவேலு படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு கோபத்துடன் கிளம்பிச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:காதலர் தினத்தில் இன்ப அதிர்ச்சி தரவிருக்கும் இளையராஜா!

ABOUT THE AUTHOR

...view details