இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் ரியோ ராஜ் - ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகிவரும் படத்திற்கு வடிவேலுவின் பிரபல டயலாக்கான 'பிளான் பண்ணி பண்ணனும்' என்பதை தலைப்பாக வைத்துள்ளனர்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மோஷன் போஸ்டரை விஜய்சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பயண கதையாக உருவாகியுள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். பாணா காத்தாடி, செம போத ஆகாத படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் - யுவன் ஷங்கர் ராஜா புதிய படத்தில் கூட்டணி அமைத்துள்ளனர்.