வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘வாடிவாசல்’ படத்தின் டைட்டில் லுக் வெளியாகியுள்ளது. இன்று வெற்றிமாறன் பிறந்தநாள் என்பதால் டைட்டில் லுக் விடப்பட்டுள்ளது. ஜூலை 23ஆம் தேதி சூர்யா பிறந்தநாளன்று இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை சூர்யா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
சி.சு. செல்லப்பா எழுதிய ‘வாடிவாசல்’ எனும் நாவலைத் தழுவி இப்படம் உருவாகவுள்ளது. தமிழர் பண்பாட்டை பறை சாற்றும் ஜல்லிக்கட்டுதான் இப்படத்தின் மையம். அதனால், டைட்டில் லுக்கே அதற்கேற்றபடி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கிறார்.