தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

இந்த வாரம், அப்டேட் வாரம்... மகிழ்ச்சியில் சூர்யா ரசிகர்கள்! - வாடிவாசல் பட அப்டேட்

நடிகர் சூர்யா நடிக்கவுள்ள 'வாடிவாசல்' படத்தின் புதிய அப்டேட் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சூர்யா
சூர்யா

By

Published : Jul 15, 2021, 7:07 PM IST

சூர்யா- வெற்றிமாறன் காம்போவில் உருவாகவுள்ள 'வாடிவாசல்' படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு இன்று (ஜூலை.15) வெளியாகியுள்ளது.

சூர்யாவின் 'வாடிவாசல்'

'அசுரன்' படத்தைத்தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன், சூரியை வைத்து 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார். இதனையடுத்து அவர் அடுத்ததாக சூர்யாவை வைத்து 'வாடிவாசல்' படத்தை இயக்கவுள்ளார். கலைப்புலி தாணு இப்படத்தைத் தயாரிக்கிறார்.

ரசிகர்களின் கோரிக்கை

சி.சு.செல்லப்பா எழுதியுள்ள இந்தப் படத்தின் அப்டேட்டை வெளியிடுமாறு சூர்யா ரசிகர்கள் நீண்ட நாள்களாகக் கோரிக்கை வைத்துவந்தனர்.

'வாடிவாசல்' போஸ்டர்

வாடிவாசல் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு

இந்நிலையில், 'வாடிவாசல்' படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் நாளை (ஜூலை.16) மாலை 5.30 மணிக்கு வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. போஸ்டரில் சூர்யாவின் கெட் ஆப் எப்படி இருக்கும் எனத் தெரிந்துகொள்ள தாங்கள் மிகுந்த ஆர்வமாக இருப்பதாக சூர்யா ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

அப்டேட் வாரம்

இந்த வாரத்தில் மட்டும் அஜித்தின் வலிமை பட போஸ்டர், கமல்ஹாசனின் விக்ரம் போஸ்டர் ஆகியவை வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details