தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அடுத்த வாரம் ஓடிடியில் வெளியாகும் சிவகார்த்திகேயன் படம் - சிவகார்த்திகேயன் தயாரிப்பு

சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள 'வாழ்' திரைப்படம் இம்மாதம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்

By

Published : Jul 8, 2021, 11:00 PM IST

'அருவி' படத்தைத் தொடர்ந்து அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'வாழ்'.

புதுமுகங்கள் நடித்துள்ள இப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்த நிலையில், கரோனா ஊரடங்கு காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிப்போனது.

இந்நிலையில் 'வாழ்' திரைப்படம், தற்போது சோனி லிவ் ஓடிடி தளத்தில் வரும் 16ஆம் தேதி வெளியாகவுள்ளது. மேலும் படத்தின் ட்ரைலர், பாடல்கள் நாளை (ஜூலை 9) வெளியாகும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:கௌதம் மேனன் படத்திற்கு வசனம் எழுதும் ஜெயமோகன்

ABOUT THE AUTHOR

...view details