விஜய் நடிப்பில், ‘கைதி’ பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம், ‘மாஸ்டர்’. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்துமுடிந்த நிலையில் கரோனா ஊரடங்கு காரணமாக படம் வெளியாகும் தேதி தள்ளிவைக்கப்பட்டது. இத்திரைப்படம் தீபாவளி விடுமுறைக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தில் அனிருத் இசையமைத்துள்ள பாடல்கள், அனைத்துமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதிலும் குறிப்பாக இதில் இடம்பெற்றுள்ள ’வாத்தி கம்மிங்’ பாடலுக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள்வரை ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.