தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'ஊரடங்கில் நான் கற்றுக்கொண்ட பாடம் இதுதான்' - வாணி கபூர் - வாணி கபூர்

நடிகை வாணி கபூர் ஊரடங்கு காலகட்டத்தில் தான் கற்றுக்கொண்ட பாடம் குறித்து பேட்டியளித்துள்ளார்.

வாணி கபூர்
வாணி கபூர்

By

Published : Jul 6, 2020, 7:29 PM IST

பாலிவுட்டில் 1980களில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் திரைப்படம் 'பெல்பாட்டம்'. ரஞ்சித் எம் திவாரி இயக்கும் இப்படத்தில் அக்‌ஷய் குமார் நாயகனாக நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக வாணி கபூர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அக்‌ஷய் குமார் உடன் வாணி கபூர் நடிக்கும் முதல் திரைப்படம் இது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடிகை வாணி கபூர் ஊரடங்கு உத்தரவால் வீட்டில் இருக்கும் தனது நேரத்தை எவ்வாறு செலவு செய்கிறார் என்பது குறித்து பேட்டியளித்துள்ளார். அதில், "வீட்டில் இருப்பது சிரமமாக இருந்தது. இந்த கரோனா மூலம் எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்று கற்றுக்கொண்டேன். அதேபோல் வருங்காலத்தில் இதுபோன்ற சூழல் ஏற்பட்டால் தயாராக இருக்க வேண்டும்.

இந்த கரோனாவால் அடுத்தவர்களின் அன்பு தெரிகிறது. மேலும் அடுத்தவர்களின் அன்பை உதாசீனம் செய்யக்கூடாது. இதுதான் நான் இந்த குறைந்த நேரத்தில் கற்றுக்கொண்ட பாடம்" என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க:'அழகை தக்க வைத்து கொள்ள ஆகச்சிறந்த வழி யோகா' - பாலிவுட் நடிகைகள்

ABOUT THE AUTHOR

...view details