இந்தப் படத்தில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன், சரத்குமார், ராதிகா சரத்குமார், நந்தா, சாந்தனு, அமித்ஷா பிரதான் உள்ளிட்டோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துவருகிறார்கள். இயக்குநர் மணிரத்னம் திரைக்கதை எழுத, புதுமுக இயக்குநர் தனா இயக்குகிறார். இவர் மணிரத்னத்தின் உதவியாளராக சில படங்களில் பணிபுரிந்துள்ளார்.
'வானம் கொட்டட்டும்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் வெளியீடு! - வானம் கொட்டட்டும் ஃபர்ஸ்ட் சிங்கிள் டராக்
இயக்குநர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ், லைகா புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துவரும் 'வானம் கொட்டட்டும்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
முன்னதாக படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியிடப்பட்டது. தற்போது பல்வேறு சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடிய பாடகர் சித் ஸ்ரீராம் இசையில் 'கண்ணு தங்கோம்' என்ற ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக்கை இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்படத்தின் மூலம் சித் ஸ்ரீராம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இதையடுத்து வரும் ஜனவரி மாதம் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.
இந்தப் படத்தில் விக்ரம் பிரபு - ஐஸ்வர்யா ராஜேஷ் அண்ணன் தங்கையாகவும் அவர்களது பெற்றோராக சரத்குமார் - ராதிகா சரத்குமாரும் நடித்துள்ளனர். குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக ஃபேமிலி டிராமா படமாக 'வானம் கொட்டட்டும்' திரைப்படம் உருவாகிவருகிறது.