தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

புதுயுக்தியை சாதுர்யமாகக் கையாண்டு வெற்றி பெற்ற 'வி1' - வி1 புரோமோஷன்

குழந்தைகள் பாலியல் விழிப்புணர்வை தூண்டும் வகையில் போஸ்டரில் எழுத்துக்களை மறைத்து வைத்து புதிய விளம்பரயுத்தியை வி1 படக்குழு சாதுர்யமாகக் கையாண்டுள்ளனர்.

V1

By

Published : Nov 12, 2019, 8:12 PM IST

ராம் அருண் காஸ்ட்ரோ, விஷ்ணு பிரியா, லிஜேஷ், மைம் கோபி, காயத்ரி, லிங்கா, மோனிகா, மனிஷா ஜித் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘வி1’. பாவெல் நவகீதன் இயக்கத்தில் ரோனி ரப்ஹெல் இசையில் கிருஷ்ணசேகர் ஒளிப்பதிவில் பிரேம்குமார் படத்தொகுப்பில் என முற்றிலும் புதுமுகங்களின் உழைப்பினால் இந்த படம் உருவாகியுள்ளது.

ஒவ்வொரு படத்திற்கும் புதுப்புது விளம்பரம் என்பது சுலபமான விஷயமில்லை. அதிலும் முற்றிலும் புதுமுகங்கள் உள்ள படமென்றால் விளம்பர யுக்திக்கான அதிக கவனம் இருக்க வேண்டும். அந்த வகையில்"வி1" படக்குழு சாதுர்யமாக வெற்றி பெற்றுள்ளது.

இது குறித்து படக்குழுவினர் தெரிவிக்கையில், படத்தின் கதை இன்வஸ்டிகேட்டிவ் திரில்லர் என்பதால் அதையே கருவாக எடுத்துகொண்டு தங்கள் "வி1" போஸ்டர் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு புதிர் வைத்தோம்.

புதுயுக்தியை கையாண்ட வி1

குழுந்தை பாலியல் விழிப்புணர்வை தூண்டும் வகையில் அந்த போஸ்டரில் எட்டு எழுத்துகள் மறைந்துள்ளது என்றும் அந்த எழுத்துகளை ஒன்று சேர்த்தால் ஒரு வார்த்தை உருவாகும் எனவும் அறிவித்து இருந்தோம்.

சரியான விடையை அனுப்பியவர்களுக்கு குலுக்கல் முறையில் 8 கிராம் தங்க சங்கிலி அளிக்கப்படும் என்று கூறியிருந்தனர். "Bad Touch" என்ற பதிலை அனைவரும் ட்விட்டரில் பதிவு செய்ய, அந்த வார்த்தை இந்திய அளவில் டிரெண்ட் ஆனது.

இந்த நிகழ்வு "வி1" படக்குழுவிற்கு பெறும் மகிழ்ச்சியை அளித்தது மட்டுமன்றி எங்களின் விளம்பர யுக்தி வெற்றி பெற்றதை எண்ணி அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் என்றனர்.

இறுதிக்கட்ட பணிகளில் உள்ள "வி1" டிசம்பர் 6ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளதாகவும் விரைவில் இப்படத்தின் டீசரும் ட்ரெய்லரும் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details