தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

’உறியடி’ விஜய் குமார் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்! - Uriyadi director new movie shooting commenced

’உறியடி’ இயக்குநர் விஜய் குமார் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியது.

’உறியடி’ விஜய் குமார் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்
’உறியடி’ விஜய் குமார் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

By

Published : Jul 16, 2021, 2:39 PM IST

'உறியடி', 'உறியடி 2' படங்களை எழுதி, இயக்கி, நடித்தவரும், சூரரைப் போற்று படத்திற்கு வசனம் எழுதியவருமான விஜய் குமார் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று (ஜூலை.16) சென்னையில் தொடங்கியது.

அறிமுக இயக்குநர் அப்பாஸ் இயக்கவிருக்கும் இத்திரைப்படத்தை 'ரீல் குட் பிலிம்ஸ்' சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரிக்கிறார். அறிமுக இயக்குநரான அப்பாஸ், உறியடி படத்தின் இரண்டு பாகங்களிலும் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் ஆவார்.

’உறியடி’ விஜய் குமார் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

விஜய் குமாருக்கு ஜோடியாக அர்ஷா எனும் நடிகை அறிமுகமாகிறார். இவர்களுடன் நடிகர்கள் சங்கர் தாஸ், அவினாஷ், கார்த்திகேயன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

பிரபல ஒளிப்பதிவாளர் ரவி வர்மனிடம் உதவியாளராகப் பணியாற்றிய பிரிட்டோ இப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார். படத்தொகுப்பு வேலைகளை கிருபாகரனும், சண்டைக்காட்சி மற்றும் கலை இயக்கத்தை உறியடி படத்தின் மூலம் அறிமுகமான விக்கி, ஏழுமலை ஆகிய இருவரும் கவனிக்கின்றனர்.

’லைஃப் ஸ்டைல் ஆக்ஷன் டிராமா’ வகையில் தயாராகும் இந்தப் படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று தொடங்கி தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு நடைபெற உள்ளது.

இதையும் படிங்க:சிவப்பு கலர் சிங்குச்சா... மாஸ் காட்டும் 'மாஸ்டர்' மாளவிகா..

ABOUT THE AUTHOR

...view details