டூடி எண்டர்டெயின்மென்ட்ஸ் சூர்யா தயாரிப்பில் 'உறியடி 2' படம் உருவாகிக் கொண்டிருக்கும் நிலையில், படத்தினுடைய டீசர் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
'அரசியல்ல நாம தலையிடணும்'... இளைஞர்களின் அரசியல் 'உறியடி 2' டீசர் வெளியீடு! - சூர்யா
சூர்யா தயாரிப்பில் உறியடி 2 படத்தின் டீசர் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
கல்லூரி மாணவர்கள் சந்திக்கும் சாதிய பிரச்னைகளைப் பற்றி பேசிய படம் உறியடி. படத்தினுடைய நாயகன் விஜய் குமார்தான் உறியடி படத்தின் இயக்குநர், உறியடி 2 படத்தை இயக்கியிருப்பதும் விஜய் குமார்தான். சாதியப் பிரச்னைகளை பெரியவர்களுக்கு சொல்வதை விடுத்து இளைஞர்களுக்கு கூறுவதுதான் உறியடி முதல் பாகத்தினுடைய கரு. அதனுடைய தொடர்ச்சியாக இரண்டாம் பாகமும் இயக்கப்பட்டுள்ளது.
முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் பெரிய புரொடக்ஷன் பேனர் என்பதால் படமும் பெரிய அளவில் இருக்கும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. படம் விரைவில் திரைக்கு வரும் என்று படக்குழு அறிவித்துள்ளது.