தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஊர்பியின் படு கிளாமர்: அம்மாடியோவ் விமான நிலையத்திலேயே இப்படியா? - urfi latest news

நடிகை ஊர்பி ஜாவேத் விமான நிலையத்திற்குச் சென்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அந்தப் புகைப்படத்தில் அவர் அரைகுறை ஆடையுடன் இருப்பதை ரசிகர்கள் விமர்சித்துவருகின்றனர்.

ஊர்பி
ஊர்பி

By

Published : Sep 4, 2021, 7:22 AM IST

Updated : Sep 4, 2021, 8:49 AM IST

இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்துவருபவர் ஊர்பி ஜாவேத். தனது 10 வயதில் நடிக்க ஆரம்பித்த இவர், ஆறு முதல் ஏழு தொடர்களில் இதுவரை நடித்துள்ளார்.

இவர் கடைசியாக பிக்பாஸ் OTT நிகழ்ச்சியில் கலந்துகொண்டு எட்டாவது நாளில் போட்டியிலிருந்து வெளியேறினார். இந்நிலையில் ஊர்பி ஜாவேத் சமீபத்தில் மும்பை விமான நிலையத்திற்கு சென்றுள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

STOP USING PLASTIC என்ற வாசகத்துடன் டெனிம் கோட் அணிந்து அவர் சென்றிருந்தார். அந்தப் புகைப்படங்களைக் கண்ட அவரது ரசிகர்கள் பலரும் ஊர்பியை சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்துவருகின்றனர்.

முன்னதாக நடிகை ஊர்பி தான் திரைத் துறைக்குள் சிறு வயதில் நுழைந்தபோது, ஏற்பட்ட எதிர்ப்புகள் குறித்து பகிர்ந்துகொண்டார்.

அவர் கூறியதாவது, ”நான் திரைத் துறைக்குள் நுழைந்தபோது கல்லூரிகூட படிக்கவில்லை. அப்போது பதினோராம் வகுப்பு படித்துவந்தேன். என் மீது நிறைய எதிர்மறையான கருத்துகள் வந்தன. அப்போது என் குடும்பத்தினரும் எனக்கு ஆதரவாக இல்லை.

என் குடும்பமும் என் மீது குற்றஞ்சாட்டினர். என் தந்தை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் என்னைக் கொடுமைப்படுத்தினார். நான் அனுபவித்த கொடுமைகளை எந்தப் பெண்ணும் இனிமேல் எதிர்கொள்ளக் கூடாது” எனத் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க:போதை பொருள் விவகாரம்: நேரில் ஆஜரான ரகுல் ப்ரீத் சிங்!

Last Updated : Sep 4, 2021, 8:49 AM IST

ABOUT THE AUTHOR

...view details