தெலுங்கில் கடந்த பிப்ரவரி மாதம் பிச்சிபாபு சனா இயக்கத்தில் வெளியானப்படம் 'உப்பெனா'. இந்த படத்தில் நாயகனாக வைஷ்ணவ் தேஜூம் நாயகியாக கீர்த்தி ஷெட்டியும் நடித்திருந்தனர். முக்கிய கதபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். இந்த படத்தின் வெற்றிக்கு பின் கீர்த்தி ஷெட்டி தெலுங்கில் முன்னணி நாயகிகளில் ஒருவராக வலம் வருகிறார்.
ஒப்பந்தம் செய்திருக்கும் படங்களை முடிப்பதில் கவனம் செலுத்துக்கிறேன் - கீர்த்தி ஷெட்டி - கீர்த்தி ஷெட்டியின் புதியப்படங்கள்
சென்னை: இப்போதைக்கு மொத்தமாக 3 படங்களில் நான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளேன். அந்த படங்களை முடித்துக் கொடுப்பதே தற்போது நான் கவனம் செலுத்தும் ஒரே விஷயம் என நடிகை கீர்த்தி ஷெட்டி தெரிவித்துள்ளார்.
லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்தினேனி நடிக்கும் ஒரு படம், நானி நடிக்கும் ஷ்யாம் சிங்கா ராய், சுதீர் பாபு நடிக்கும் தலைப்பிடப்படாத படம் என மூன்று படங்களில் நடிக்க கீர்த்தி ஷெட்டி ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக சமூகவலைதளத்தில் கீர்த்தி ஷெட்டி தமிழ் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வலம் வந்தன.
இந்த செய்திகளுக்கு பதிலளிக்கும் விதமாக கீர்த்தி ஷெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில், " எனது அடுத்த படங்கள் குறித்து நிறைய புரளிகளைக் கேள்விப்படுகிறேன். நானி, சுதிர் பாபு, ராம் என இப்போதைக்கு மொத்தமாக 3 படங்களில் நான் ஒப்பந்தமாகி உள்ளேன். ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கும் படங்களை முடிப்பதே நான் இப்போது கவனம் செலுத்தும் ஒரே விஷயம். எனது அடுத்தடுகத்த படங்களைக் கையெழுத்திடும் போது நானே உங்களுக்கு கண்டிப்பாக தெரிவிக்கிறேன். உங்களையும் குடும்பத்தினரையும் பார்த்துக் கொள்ளுங்கள். இது கடுமையான காலகட்டம். வலிமையாக இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்" என கீர்த்தி ஷெட்டி தெரிவித்துள்ளார்.